ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விவேகசிந்தாமணி பாடல்: 11



கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
விற்பன் விவேகம் உள்ள வேந்தனைச் சேர்ந்தோர் வாழ்வர்

இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்தல் அரிது அரிது ஆகும் அம்மா.



கற்பக விருச்சம் என்ன கேட்டாலும் கொடுக்கும், கருப்பு வண்ணமுடைய காகமானது அம்மரத்தில் இருந்து உன்னர்க்கரிய அமுது கேட்டாலும் கிடைக்கும் அதுபோல அறிவில் சிறந்த பல நல்லோரை நாடிச் சென்று அவருடன் இருப்போருக்கு நன்மையே விளையும் .

அது போலவே மூடர்களை சார்ந்து இருப்போருக்கு தீமையே விளையும் எப்படி எனில். இவ்வுலகில் இருக்கும் கிளியைப் போல

காகம் கிளியுடன் ஒப்பிடுகையில் அழகில் சற்று குறைந்தது அப்படிப்பட்ட காகம் இருக்க வேண்டிய கற்பக மரத்தில் இருப்பது நல்லோரின் நட்பு போன்றது.

கிளி என்னதான் அழகுடன் இருந்தாலும் தேயோருடன் சேருவது இவ்வுலகில் இருந்து உணவிற்காக வாடுவது போன்றதாகும் 

விவேகசிந்தாமணி பாடல்: 10


வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாவிப் பிய்த்திடும்

ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.


மழையில் நனைந்துகொண்டிருந்தது ஒரு குரங்கு அதனைப் பார்த்த தூக்கணாங் குருவி கவலைப் பட்டு அதனிடம் சொன்னது , நீயும் எண்ணப் போல கூடு கட்டி இடுந்தால் இப்படி மழையில் நனைந்து கொண்டு இருக்க வேண்டியது இல்லையே என்று. ஆத்திரம் கொண்ட குரங்கு அந்த தூக்கனாங் குருவி கூண்டயே பியித்து எரிந்துவிட்டது. அதுபோல

அறிய நூல்களில் உள்ள பல நல்ல கருத்துகளை அறிவில்லாத மூடர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் எந்த பயனும் இல்லை, அவர்களால் நமக்கு துன்பமே நேரும்.

அதனால் சைவர்கள் மற்ற மதத்தினரிடம் சைவத்தின் பெருமையை சொல்லவேண்டாம் அப்படி சொன்னாலும் அவர்களால் அதைப் புரிந்துகொள்ள இயலாது

விவேகசிந்தாமணி பாடல்: 9


தண்டாமரையுடனே பிறந்தும் தண்டேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத் திடையிருந்தும் வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் புல்லர் அறியார் நல்லோரை
கண்டே களித்துட னுறவாடிக் கலப்பார் தம்முள் கற்றோரே

தாமரையில் இருக்கும் குளிர்ந்த தேனினைப் பற்றி அதே குளத்தில் இருக்கும் தவளைக்கு தெரியாது. ஆனால் வேறு இடத்தில் வாழும் வண்டானது

அந்த தாமரையை தேடி வந்து அதன் சுவை மிகுந்த குளிர்ச்சியான தேனினை உண்டு மகிழும்.

அதுபோல அறிவற்றவர்கள் , தங்களுடன் எவ்வளவு தான் நல்லவர்கள் (சான்றோர்கள்) உடன் இருந்தாலும், தங்களுடன் பழகி வரும் நல்லோரது சிறப்பினை உணராது இருப்பர். ஆனால் இனம் இனத்தோடு சேரும் என்பதனைப் போல எங்கேயோ இருந்து வரும் கற்றறிந்தவர்கள் நல்லவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களோடு நட்பு பெற்று என்றும் சிறப்புடன் இருப்பர்.

விவேகசிந்தாமணி பாடல்: 8


பொருட்பாலை விரும்புவர் காமப்பாலில் மூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்ப அறிவொன் றி்ல்லார்
குருப்பால் கடவுளர்பால் வேதியர்பால் இரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்ககே விருப்பமுடன் கோடிப்பொன் கும்பிட் டீவாரே.

அறிவென்று ஒன்றும் கிடையாத மூடர்கள் பொருட்செல்வத்தில் மீது மட்டுமே ஆசைகொண்டு இருப்பார், சிற்றின்பதிலேய மூழ்கி இருப்பார், புகழையும் அருளையும் தரக்கூடிய தரும (அற ) நெறியில் இருக்கமாட்டார்கள்.

குருவிடம் தட்சணையும் , கடவுளிடம் சமர்ப்பணமும் , பிராமணர்களிடம் தானமும் கொடுக்க விரும்ப மாட்டார்கள் தாங்களை மதிக்காமல் தங்களுக்கு நல்லது செய்யாமல் தங்களை செருப்பால் அடிப்பவர்களுக்கே தாமாகவே விரும்பி வலிய சென்று ஏராளமான பொருட்களைக் கொடுப்பார்கள். 

விவேகசிந்தாமணி பாடல்: 7



ஆலிலை பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தம்மிலம் என்றே வாழும்

வாலிபம் வயோதி கம்பல் விலங்கினம் கூடச் சேரும்
ஆலிலை ஆதி போனால் அதனடி இருப்பார் உண்டோ.



ஆலமரத்தில் இனிய காய் கனி ஆகியவை இருந்தால் மிகுதியான பறவைகள் அந்த மரத்தில் தங்கி கூடு கட்டி இருக்கும். அதே ஆலமரம் பட்டுப் போய் விட்டால் எந்த பறவைகளும் தங்காது

அதேபோல பெரும் செல்வம் பெற்று இருப்பவரை தேடி ஏராளமானோர் வருவார்கள், அதே செல்வர் வறுமைப் பட்டால் அவரை தேடி வருபவர் யாரேனும் உண்டோ? 

விவேகசிந்தாமணி பாடல்:6



கதிர்பெறு செந்நெல் வாடக் கார்குலம் கண்டும் சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும் கொள்கைபோல் குவல யத்தே

மதிதனம் படைதத பேர்கள் மறுகுவோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைததோர்க் கீவார் நிலையிலார்க் கீய மாட்டார்.


மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள்.

( பணம் பணத்துடன் சேரும் , மனம் மனதுடன் சேரும்)

விவேகசிந்தாமணி 5



விவேகசிந்தாமணி

பாடல்:5

ஒப்பொடு முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பு இலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும்

முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவார் ஆயின்
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும் தானே.


மனம் நன்கு ஒப்பி முகமலர்ச்சியுடன் உபசரித்து உண்மையாகமனம் பொருந்தி இனிமையாகப்பேசி, உப்புக்கூட இல்லாத கூழ் உணவைப்பரிமாறினாலும் அதுதான் அமிழ்தம் ஆகத்தோன்றும். அதற்குமாறாக, வாழை மா பலா முதிலிய இனிய கனிகளோடு, பாற் சோறு முதலியவற்றைக் கடுகடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு உணவு இட்டால், முன்பே பிடித்த பசியோடு மேலும் அதுகடுமையான பசியினையே கொடுக்கும். பசி அதிகமாகும் என்பதாம்.

ஒப்பொடு- மனம் ஒப்பி; கடுத்து- கடுகடு வென்று; கப்பிய- பிடித்த