ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விவேகசிந்தாமணி 5



விவேகசிந்தாமணி

பாடல்:5

ஒப்பொடு முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பு இலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிழ்தம் ஆகும்

முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவார் ஆயின்
கப்பிய பசியினோடு கடும் பசி ஆகும் தானே.


மனம் நன்கு ஒப்பி முகமலர்ச்சியுடன் உபசரித்து உண்மையாகமனம் பொருந்தி இனிமையாகப்பேசி, உப்புக்கூட இல்லாத கூழ் உணவைப்பரிமாறினாலும் அதுதான் அமிழ்தம் ஆகத்தோன்றும். அதற்குமாறாக, வாழை மா பலா முதிலிய இனிய கனிகளோடு, பாற் சோறு முதலியவற்றைக் கடுகடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு உணவு இட்டால், முன்பே பிடித்த பசியோடு மேலும் அதுகடுமையான பசியினையே கொடுக்கும். பசி அதிகமாகும் என்பதாம்.

ஒப்பொடு- மனம் ஒப்பி; கடுத்து- கடுகடு வென்று; கப்பிய- பிடித்த

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக