ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விவேகசிந்தாமணி பாடல்: 9


தண்டாமரையுடனே பிறந்தும் தண்டேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத் திடையிருந்தும் வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் புல்லர் அறியார் நல்லோரை
கண்டே களித்துட னுறவாடிக் கலப்பார் தம்முள் கற்றோரே

தாமரையில் இருக்கும் குளிர்ந்த தேனினைப் பற்றி அதே குளத்தில் இருக்கும் தவளைக்கு தெரியாது. ஆனால் வேறு இடத்தில் வாழும் வண்டானது

அந்த தாமரையை தேடி வந்து அதன் சுவை மிகுந்த குளிர்ச்சியான தேனினை உண்டு மகிழும்.

அதுபோல அறிவற்றவர்கள் , தங்களுடன் எவ்வளவு தான் நல்லவர்கள் (சான்றோர்கள்) உடன் இருந்தாலும், தங்களுடன் பழகி வரும் நல்லோரது சிறப்பினை உணராது இருப்பர். ஆனால் இனம் இனத்தோடு சேரும் என்பதனைப் போல எங்கேயோ இருந்து வரும் கற்றறிந்தவர்கள் நல்லவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களோடு நட்பு பெற்று என்றும் சிறப்புடன் இருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக