விவேகசிந்தாமணிபாடல்:4
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கவே மஞ்சள் பூசி மிகு மணம் செய்தாலும் தான்
அக்குலம் வேறதாமோ அதனிடம் புனுகு உண்டாமோ
குக்கலே குக்கல் அல்லால் குலம் தனில் சிறந்ததாமோ.
தெருநாயைப் பிடித்துப் புனுகுப்பூனையை அடைக்கவேண்டிய கூண்டினில் அடைத்து வைத்து அதற்குத் தினந்தோறும் அதிகமான மஞ்சளைப்பூசி மிக்க மணமுடையதாக அதனை ஆக்கினாலும், அந்நாயானது வேறாக ஆகிடுமோ? அதாவது புனுகுப்பூனையாக ஆகுமோ? அதனிடத்தில் மணம்மிகுந்த வாசனைப்பொருளான 'புனுகு' உண்டாகுமா? நாய் என்றும் நாய்தான், அது என்றும் உயர்ந்த புனுகுப்பூனை ஆகாது என்று அறியவும். அததற்கு உள்ள இயல்புதான் வரும் என்பதாம்.
குக்கல்- தெருநாய்; நாவி- புனுகுப்பூனை; புனுகு - வாசனைப் பொருள் (பூனையில் இருந்து எடுப்பது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக