விவேகசிந்தாமணி 1
விவேகசிந்தாமணி நூலைத் தொகுத்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அதிலுள்ள கருத்துக்கள் அருமையானவை.
இந்த நூலில் உள்ள பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்
முதல் பாடல் விநாயகர் துதியுடன்
அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.
கணபதியைக் கையால் கும்பிட்டால் நம் துன்பங்கள்(அல்லல்) மறைந்துபோகும். வலிமைமிக்க் வினைகள் (கர்மவினை) அழ்ந்து போகும். தாய்வயிற்றிற் பிறந்த பிறப்பு எனும் துன்பம் அழிந்துபோகும் (மீண்டும் மீண்டும் பிறந்து துன்புறும் பிறவாநெறி கிடைக்கும் என்றுபொருள்). என்றும் மறைந்துபோகாத துயரங்கள் நீங்கும். நல்ல குணம்(நற்பண்புகள்) ஓங்கிவளரும், அருணாசலத்தின் கோபுரத்தில் எழுந்தருளியுள்ள செல்வக்கணபதியை-செல்லபபிள்ளையாரை- கையெடுத்துக்கும்பிட்டால்.
விவேகசிந்தாமணி நூலைத் தொகுத்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அதிலுள்ள கருத்துக்கள் அருமையானவை.
இந்த நூலில் உள்ள பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்
முதல் பாடல் விநாயகர் துதியுடன்
அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக